Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்க ஜனாதிபதி அதிரடி முடிவு?

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்கும் அதிரடி முடிவொன்றை ஜனாதிபதி இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
நேற்றிரவு இது தொடர்பான நீண்டதொரு கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும் உரிமையுடன் குடியுரிமை மீண்டும் வழங்கப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவி மோகம் கொண்ட சரத் பொன்சேகா மீண்டும் வாக்குரிமை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் , ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக களமிறங்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்பது ஜனாதிபதி தரப்பு கணிப்பாகும்.
இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி கனவை கலைத்துப் போடுவதுடன், வாக்குகளை சிதற வைக்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
எனினும் இந்த முடிவு குறித்து கோட்டாபய ராஜபக்ஷ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் நோக்கத்தில் கூட சரத் பொன்சேகாவுக்கு எந்தவித நன்மை பயக்கும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று அவர் கடுமையான தொனியில் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments