Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரதியமைச்சர் திகாம்பரமும் ஐதேகவுடன் இணைகிறார்! – இன்று வெளியாகும் அறிவிப்பு

அண்மையில், தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் நியமிக்கப்பட்ட பழனி திகாம்பரம் பிரதியமைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு ஸ்ரீகொத்தாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஆளுங்கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள பிரதியமைச்சர் திகாம்பரம், அது தொடர்பான முடிவை பெரும்பாலும் இன்றுஊடகங்களுக்கு அறிவிப்பார் என்று தெரிய வருகின்றது.
அதேவேளை, நேற்றுமாலை நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஆளுங்கட்சியை விட்டு ஐதேகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments