சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சென்னை செல்ல முற்பட்ட வேளை, இவரை சுங்கப் பிரிவினர் சோதனை செய்துள்ளனர். இதன்போது இவர் வசமிருந்து நான்கு தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 20 இலட்சம் ரூபாய் என சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 Comments