Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

TMVP சந்தாப்பணத்தில் வீடு

புதூரைச் சேர்ர்ந்த கூலித்தொழிலாளியான மோகன் தனது சுகவீனம் உற்ற மனைவி மற்றும் இரண்டு வயதுக்கு வந்த பிள்ளைகளுடன் வாழ்க்கைச்செயவினைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் சீலையினால் அமைக்கப்பட்ட வீட்டுக்குள் குடும்பம் நடாத்தி வருவதனை இட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை அடுத்து புதிய வீடு கட்டி பாரம் கொடுக்கப்பட்டது. இப் பாரம் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர்  பூ.பிரசாந்தன் குறிப்பிடுகையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது கட்சி நிதியில் இருந்து கட்டிக்கொடுத்த முதலாவது வீடு இது எனவும் எத்தனையோ வீடுகள்
,மலசலகூடங்கள்,பாதைகள்,பாடசாலைகள்,பாலங்கள் என பல கோடிக்கணக்கான ரூபாய்கள் தமிழ் மக்கள் வீடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்தபோதும்  இன்றும்  செய்து கொண்டிருக்கின்றோம்.அப்போதேல்லாம் நாம் அடைந்த திருப்தியை விட நாம் இப்போது மட்டற்ற திருப்தி கொள்கிறோம்.

இது எந்த அரச நிதியிலேயே அல்லது  வெளிநாட்டு உதவியாளர்களின் நிதியிலேயே அமைக்கப்படாமல் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களினால் மாதாமாதம் சேர்க்கப்படும் சந்தாப்பணத்திலிருந்தே இவ்வீடு அமைக்கப்பட்டுள்ளது.எமது கட்சி பாரிய நிதி வளத்தினைக்கொண்டுள்ள கட்சியல்ல வைத்தியர்கள்,பொறியலாளர்கள்,மீனவர்,கூலித்தொழிலாளிகள்,மேசன் என பல தொழில்களில் ஈடுபடும் எமது கட்சியின் உறுப்பினர்கள் மாதாமாதம் தாம் உழைக்கும் சம்பளத்தில் இருந்து 10வீதத்தினை கட்சியின் வளர்ச்சிக்காக சந்தாப்பணமாக செலுத்துவார்கள் இவ்வாறு வியர்வை சிந்தி உழைத்த கட்சியின் சந்தாப்பணத்தில் இருந்து கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனையில் சுமார் 5,75000ரூபா பெறுமதி செலவில் முதலாவது வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு  பெரும் மகிழ்ச்சி இது போன்று இத்திட்டம் தொடரும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் ஆகிய பூ.பிரசாந்தன் முன்னாள் மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி. செல்வி மனோகர் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்,கிராம உத்தியோகஸ்தரும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments