Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் வயது குறைந்த சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை

மட்டக்களப்பில் வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்த 24 பேருக்கு  மட்டக்களப்பு நீதிவான் நீதிவான் நீதிமன்றம் தலா இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வயது குறைந்த சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மண்முனை வடக்கு மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த திடீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மதுவரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பண்டார மற்றும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சோதிநாதன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மதுவரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் வர்த்தக நிலையங்களில் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நேற்று காலை தொடக்கம் பிற்பகல் நான்கு மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

குறித்த வியாபாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு என்ற காரணத்தினால் நீதிபதியினால் எச்சரிக்கை செய்யப்பட்டு தலா இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

21வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.அதனை மீறி விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று ஏனைய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments