ஜனாதிபதித் தேர்தலை பாப்பரசரின் வருகைக்கு முன்னதாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஒருசிலர் வலியுறுத்துகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை சட்டப்படி நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.
|
ஜனாதிபதித் தேர்தலில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக யாரும் கருதினால், அதனை அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று தீர்த்துக் கொள்ளட்டும். அதற்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதி புனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் ஆகிய மூன்று பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியே பாப்பரசருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையன் என்ற வகையில் நாட்டு நலன் எனக்கு முக்கியம். அதன் காரணமாக பாப்பரசரின் வருகைக்கு முன்னதாக அமைதியான சூழல் நிலவும் வகையில் ஜனவரி 8ம் திகதிக்குள்ளாக தேர்தலை நடத்தி முடிப்பதே எனது இலக்காக இருக்கின்றது என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
|
0 Comments