|
ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். ஈராக்கை தொடர்ந்து சிரியாவிலும் பல நகரங்களை தன் வசப்படுத்த தீவிரமாக போரிட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் கிழக்கு பகுதிகளில் பெரிய நகரங்களில் ஒன்றான ரக்ஹாவை கைப்பற்றினர். தற்போது அடுத்த படியாக இட்னிட் நகரை கைப்பற்ற அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அது அலெக்போ மற்றும் கடற்கரை நகரமான லடாகியா இடையே உள்ளது. இவை அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியின் கீழ் உள்ளது.
|
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ஜப்கத்ர ஆல் நு ஸ்ரா தீவிரவாதிகள் இட்லிப் நகருக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கு சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட கவர்னர் அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது அங்கு அவர்களை எதிர்த்து போரிட்ட ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சிறை பிடித்தனர். அங்கு அவர்களின் தலையை துண்டித்து கொலை செய்தனர். சுமார் 70 பேரை இவ்வாறு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இட்லிப் நகரின் பெரும்பாலான பகுதிகள் தீவிரவாதிகளின் பிடிக்கு சென்று விட்டது. அங்கு பல அரசு கட்டிடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
|


0 Comments