Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்தியாவுக்குள் ஊடுருவிய சீனப்படையினருக்கு சீன அதிபரின் உத்தரவு கிடைக்கவில்லையாம்!

சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்ட பிறகும் கூட இந்திய எல்லையில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள் திரும்பாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. சீன ராணுவத்தின் லட்சணமும் அம்பலமாகி உள்ளது. காஷ்மீரின் லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இரு நாட்டுக்கு இடையே உறுதியான எல்லைக்கோடு வரையறுக்கப்படாததால் இதுபோன்ற ஊடுருவல்கள் நடந்து வருகின்றன. இரு நாடுகளின் ஒப்பந்தப்படி, ஊடுருவல் நடந்தால் அணிவகுப்பு மற்றும் பேனர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி சீன ராணுவத்தினர் 30 பேர் லடாக்கின் டெம்சாக் பகுதியில் 500 மீட்டர் ஊடுருவி முகாம்களை அமைத்தனர். பின்னர் படிப்படியாக 1000 வீரர்கள் சுமர் பகுதியிலும் ஊருடுவினர். அந்த சமயத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சீன ராணுவத்தின் ஊடுருவல் தொடர்பாக 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது, சீன ராணுவம் உடனடியாக திரும்பி செல்ல அதிபர் ஜின்பிங் நேரடியாகவே உத்தரவு பிறப்பித்தார். சீன ராணுவத்தினர் எல்லையில் இருந்து திரும்புவதாகவும் செய்திகள் வெளியாயின.
மாறாக சீன ராணுவம் திரும்பவில்லை. இன்னும் அதிகப்படியான வீரர்கள் குவிக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக ஊடுருவல் நடந்து வருகிறது. எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் இந்திய வீரர்கள் 1,500க்கும் மேற்பட்டோர் சுமர் பகுதியில் நிறுத்தப் பட்டுள்ளனர். இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது.இதன் காரணமாக அதிருப்தி அடைந்த மத்திய அரசு, டெல்லியில் நாளை நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தை ரத்து செய்தது. சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கும் வேளையில், அந்நாட்டை சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிபர் ஜின்பிங் உத்தரவிட்ட பிறகும் கூட சீன ராணுவம் திரும்பாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவிலிருந்து சீனா சென்றடைந்ததும் அதிபர் ஜின்பிங், கடந்த ஞாயிற்றுகிழமை ராணுவ உயர் அதிகாரிகளுடனான அவரச ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். பீஜிங்கில் நடந்த இந்த கூட்டத்தில், சீன ராணுவம் திரும்பாதது தொடர்பாகவும், அதிபரின் உத்தரவு ராணுவ வீரர்களை சென்றடைவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்தை தொடர்ந்து சீன பாதுகாப்பு அமைச்சகம் அதன் இணைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘சீன ராணுவ படைகள் அதிபரும், மத்திய ராணுவ கமிஷன் தலைவருமான ஜின்பிங்கின் உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்‘ என கூறி உள்ளது. மேலும், சுமர் பகுதியில் உள்ள வீரர்களுக்கும் இந்த செய்தி அனுப்பப்பட்டு உடனடியாக திரும்பி வருமாறும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதன்மூலம், 30 ஆண்டாக சீனாவின் அசைக்க முடியாத அதிபராக இருக்கும் ஜின்பிங்கின் உத்தரவே கிடைக்கப் பெறாத நிலையில்தான் சீன ராணுவம் இருந்து வரும் லட்சணம் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments