Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி


மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில் இன்று செவ்வாய்க்கிழமை இராணுவ வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.00மணியளவில் மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் அம்பலத்தடி பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக சின்னத்தம்பி சோமசேகரம் (80வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.

இராணுவ வாகனத்தில் மோதுண்டவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பிலான விசாரணையினை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments