Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை வந்த விமானம் திருச்சியில் மயிரிழையில் தப்பியது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று (21.09.2014) மதியம் 2:30 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்டது. ஓடு பாதையில் இருந்து விமானம் மேலே எழும்பியபோது, பறவை ஒன்று விமானம் மீது மோதியது. விமானத்தின் முன்பக்க காற்றாடியில் பறவை சிக்கியதால் காற்றாடி பழுதடைந்தது.
காற்றாடியின் வேகம் சற்று குறைய ஆரம்பித்ததால், நிலைமையை புரிந்துகொண்ட விமானி விமானத்தை உடனடியாக தரையிறக்கியுள்ளார். விமானத்தில் இருந்த 139 பயணிகளும் திருச்சி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பழுதடைந்த காற்றாடி மாற்றப்பட்டவுடன் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் காற்றாடியில் சிறிய பறவைகள் அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கம். ஆனால் சற்று பெரிய பறவையாக இருந்தால் அதன் எலும்புகள் விமானத்தின் காற்றாடியில் சிக்கி அதனை பழுதடையச் செய்துவிடும். மேலும் சிலவேளை எலும்புகள் உராய்வின் காரணமாக , தீ பற்றவும் வாய்ப்புகள் உள்ளது. எனவும் மேலும் தெரிவித்தனர்.
Srilanka-Fire

Post a Comment

0 Comments