மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூன்றாளம்மடு கிராம மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை நேரில் சென்று சந்தித்தார். இதன்போது மக்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் கோயில் இல்லாத பிரச்சனை மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட வீடுகள் இதுவரை புனரமைக்கப்படாமை வீடு இல்லாத பிரச்சனை குடிநீர் பிரச்சனை மின்சாரப் பிரச்சனை அறுவடை வெட்டும் இயந்திரம் உள்ளதால் வேளான்மை வெட்டுபவர்களுக்கு தொழில் பாதிப்பு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் போன்ற பல விடயங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
|
இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் அமைச்சர்கள் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மக்களிடம் உறுதியளித்தார். அத்தோடு வவுணதீவு பிரதேச செயலக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட வீடுகள் இதுவரை புனரமைக்கப்படாமை தொடர்பாகவும் பேசினார். இக் கிராமத்தில் 56 குடும்பங்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் மக்கள் சந்திப்பின் போது கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன் கலந்து கொண்டிருந்தார்.
|
0 Comments