சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்கு வரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றருக்கான விலையை 20 ரூபாவாலும், பெற்றோல் விலையை 5 ரூபாவாலும், டீசல் விலையை 3 ரூபாவாலும் குறைப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் தேசிய கட்டமைப்புக்கு நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இணைக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
0 Comments