ஊவா மாகாணசபைத் தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.எஸ். என்ற மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்துள்ளது. ஊவா மாகாண சபைத் தேர்தல் வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஊவா மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு, நுவரேலியாவில் வர்த்தக நிலையங்களிலும் ஹோட்டல்களிலும் பணியாற்றுகின்றனர். சட்ட விதிகளின்படி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அரை நாள் லீவு வழங்கப்பட வேண்டும்.
|
ஆனால் கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் இருந்து பதுளை மொனறாகல மாவட்டங்களுக்குப் பயணிக்கவே 10 மணித்தியாலங்களுக்கும் மேல் தேவை என்பதால் இந்த லீவு போதுமானதாக இல்லை. எனவே இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணையாளர் விசேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது. அத்துடன் இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணையாளரைத் தாம் சந்தித்து பேசவுள்ளார் என எஸ்.எஸ்.எஸ். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் எச்.பி.அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார்.
|
0 Comments