கி.மு 312ம் நூற்றாண்டளவில் மண்முனையினை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சிக்கு அவரது கோட்டையும் கோயிலும் அருகே குளமும் அமைந்திருந்த பிரதேசத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கின் முதலமைச்சாரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தனின் ஆலோசனையின் பேரில் முன்னாள் கிழக்கு மாகானசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தனின் வழிகாட்டுதலினால்ஆற்றல் பேரவையினால் நிறுவப்பட்ட இத்திருவுருவச்சிலை சம்பிரதாய பூர்வமாக ஆரையம்பதி ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சோதிநாதக்குருக்களின் பூசையுடன் உலக நாச்சியின் திருவுருவச்சிலை காசி லிங்கேஸ்வர லிங்கமும் இன்று(15.09.2014)வைக்கப்பட்டது.
ஆரையம்பதி ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் லோகநாதனின் தலைமையில் ஆற்றல் பேரவை மற்றும் நாம் இந்துக்கள் அமைப்பு ஆகியன இனைந்து ஏற்பாடு செய்த இன் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகானசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் ஆற்றல் பேரவையின் தலைவருமான பூ.பிரசாந்தன், ஆற்றல் பேரவைச்செயலாளர் கிஸ்கந்த முதலி, ஆற்றல் பேரவை பொருளாளர் ஜே.ஜேக்கப் , நாம் இந்துக்கள் இனைப்பாளரும் மண்முனைப்பற்று ஓட்டோ சங்கத்தலைவருமான குகராஜா, கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவரும் ஆற்றல் பேரவைக் குழுத் தலைவருமான மு.பஞ்சாச்சரம் மண்முனைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் திருமதி அரட்பிரகாசம் ஜெயமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இத்திருவுருவச்சிலையினை வடிவமைத்திருந்தவர் ஆரையம்பதியைச்சேர்ந்த ரூபன் என்பதுடன் இவற்கான காணியினை திருமதி சோமசுந்தரம் பொன்னம்மா என்பவர் இலவசமாகவழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கி.மு 312ம் நூற்றாண்டளவில் மண்முனையினை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும் அவரால் அமைக்கப்பட்ட காசி லிங்கேஸ்வரர் ஆலயமும் போர்த்துக்கீசரினால் உடைக்கப்பட்டு எச்சங்களுடன் ஆரையம்பதி கோவில்குளம் சிகரம் பிரதேசத்தில் காணப்பட்டுகின்றது.
இன்று கவனிப்பாரற்று காணப்பட்டதுடன் தற்போது இவ் இடத்தினை குப்பை கூளங்களாலும் ஊத்தை மணல்களாலும் நிரப்பி தடயங்களை சிதைத்து குடியிருப்பு காணிகளாக்க முயற்சிக்கின்றனர்.
1988-1989 காலப் பகுதியில் இவ் இடத்தில் புத்து மணல் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த போது படிகலிங்கம், காண்டா மணி உள்ளிட்ட காசி லிங்கேஸ்வரர் ஆலயத்திக்குரிய விக்கிரகங்கள், உபகரணங்கள் தென்படவே இவை தோண்டி எடுக்கப்பட்டு கோயில் குளத்தில் திருமதி. பொன்னமா என்பவரது வீட்டில் வைத்து வழிபட்டுவருவதுடன் கோயில் குளம் ஆலய உற்சவத்தின்போது ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பூசையில் வைக்கப்படுவது இன்றும் வழக்கமாக உள்ளது. கி.பி 312ம் நூற்றாண்டு அளவிலேயே கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினை கம்பு தடிகள் மூலம் குழையினால் பந்தலிட்டு பூசை செய்ததும் இவ் உலகநாச்சியே என வரலாறு கூறுகின்றது.
வரலாற்று சிறப்பு மிக்க இவ் காசி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இடிபாடுகளையும் உலகநாச்சியின் கோட்டை எச்சங்களையும் ஆராட்சிக்கு உட்படுத்துவதோடு இப்பிரதேசத்தினை புராதன இடமாக பேணி பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது

0 Comments