Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை உஹன பிரதேச செயலாளர் பிரிவில் காற்றினால் 7 வீடுகளுக்கு சேதம்

அம்பாறை உஹன பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்கள் சிலவற்றை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால்  7 வீடுகளுக்கு தேசம் ஏற்பட்டுள்ளது.
 
மஹகண்டிய பகுதியில் 5 வீடுகளும் ஹினிதுராய பகுதியில் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   உஹன பிரதேச செயலாளர் அஜந்தா குமாரி குறிப்பிட்டுள்ளார்.
 
பலத்த காற்று காரணமாக குறித்த வீடுகளின் கூரைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
 
சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக தகரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments