தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாக பிரயோக விஞ்ஞான பீடத்தில் நேற்று நடைபெற்ற பீடங்களுக்கான சபைக் கூட்டத்தின் போது, மாணவப் பிரதிநிதிகளுக்கு சிங்களத்தில் கருத்துத் தெரிவிக்கத் தடை விதித்ததாக பிரயோக விஞ்ஞான பீட மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
நடைமுறையிலுள்ள பிரச்சினை தொடர்பில் மாணவர் பிரதிநிதிகள் சிங்கள மொழியில் கருத்துத் தெரிவிக்கும் போது, பீடாதிபதி, சிங்களத்தில் கதைப்பது தடையென கூறியதாகவும் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு ஆங்கிலத்தில் தெளிவுபடுத்த முடியாது எனவும், சிங்களத்தில் தான் முடியும் எனவும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்த பின்னரும், பீடாதிபதி அதற்கு சந்தர்ப்பம் வழங்க மறுத்துள்ளார்.
இதன்பின்னர், சபையிலிருந்த சிங்கள, முஸ்லிம் விரிவுரையாளர்கள், இம்மாணவர்களினால் சிங்களத்தில் கூறப்பட்ட விடயங்களை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியதாகவும் மாணவர் சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இனவாதத்தைத் தூண்டும் விதமாக செயற்படும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதிக்கு எதிராக உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்றைய சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது
0 Comments