பிரதேசத்திலுள்ள மக்களை குடியேற்ற வேண்டுமென்று என்னோடு இரவும் பகலும் பேசி, இதற்கு கூடிய அக்கறை எடுத்துக்கொண்டதுடன், கடும் அழுத்தங்களையும் தந்தவர் முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவர்கள். இன்றைய கூட்டத்துக்கு அவருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் சமூகமளிக்க முடியவில்லை. இருப்பினும், இந்த 35 குடும்பங்களையும் குடியேற்ற நாம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இது விடயத்தில் கூடிய அக்கறை எடுத்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு இப்பிரதேச மக்களாகிய நீங்கள் காட்டாயம் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளீர்கள் என 26.08.2014ம் திகதி செவ்வாய்க்கிழமை மாஞ்சோலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் உங்களுக்கென்றொரு அரசியல் தலைமைத்துவம் கட்டாயம் தேவை. அதற்குப்பொருத்தமானவர் அமீர் அலி அவர்கள் தான். அதனைச் சித்தித்து நீங்கள் செயற்பட வேண்டும். இப்பிரதேசம் சார்பாக ஒரு அமைச்சர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது, இன்று காலியாகவுள்ளது. ஏனைய பிரதேசங்களை விட கூடியளவு வாக்குப்பலத்தைக் கொண்டுள்ள நீங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறை இனி மேலும் நீங்கள் விடக்கூடாது.
நானும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி அவர்களும் இணைந்து பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என, கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் மாஞ்சோலையில் இடம்பெற்ற, யுத்த காலப்பகுதியில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொது மக்களின் காணிகளில் மீண்டும் அவர்களை மீள்குடியேற்றுவது சம்பந்தமாகா ஆராயும் கூடத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
இந்நிகழ்வில், மீள்குடியேற்றப்பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், அமைச்சின் செயலாளர் ஜனக சுகதபால, மேலதிகச் செயலாளர் எம்.எம். நயிமுதீன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன் ரவீந்திரன், திருமதி பேரின்ப மலர் மனோகரதாஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் சந்திரபால, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் கே.பி.எஸ். ஹமீத், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உதவித்தவிசாளர் ஏ.எம்.நெளபர், மாஞ்சோலை கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல்.எம்.நஜீப், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் எம்.எச்.றுவைத் உள்ளிட்ட அதிகாரிகளும், பள்ளிவாயல் நிருவாகிகள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
0 Comments