Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உதயம் சுவிஸ் அமைப்பின் பத்தாண்டு நிறைவு விழா

2ம் இணைப்பு 
உதயம் சுவிஸ் அமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் மட்டக்களப்பு லங்கா றெஸ்டில் இடம்பெற்றது. கிழக்கு உதயம் அமைப்பின் தலைவரும் பட்டிருப்புக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது உதயம் சுவிஸ் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், போரதீவுப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளரும் கிழக்கு உதயத்தின் செயலாளருமான பி.பாலச்சந்ரன், கிழக்கு உதயம் அமைப்பின் உப தலைவர் அக்கரைப்பாக்கியன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 
இதன்போது கிழக்கு மாகாணத்தில் உதயம் சுவிஸ் அமைப்பின் அனுசரணையில் பல்வேறான வேலைத் திட்டங்களை அமுல்படுத்தி வரும் ஏடு அமைப்பு மற்றும் மாணவர் மீட்புப் பேரவை போன்றவற்றின் நிருவாகத்தினரருக்கும், சிறப்பு மலர் மற்றும் சிறப்பு இறுவட்டு போன்றவற்றை உருவாக்குவதில் பல்வேறான பங்களிப்புக்களைச் செய்தோருக்கும்  நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இது தவிர உதயம் அமைப்பின் பொருளாளரின் காத்திரமான பங்களிப்பிற்காக பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வின்போது உதயம் சுவிஸ் அமைப்பின் பத்தாண்டு நிறைவையொட்டி உதயம் எனும் சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், சிறப்பு இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

                    

Post a Comment

0 Comments