Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரஜினிகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க முயற்சியா?

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமது கட்சியில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களை பாரதீய ஜனதாக் கட்சி நிராகரித்துள்ளது.
 
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகாவின் முதலமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்தை களமிறக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்த நிலையில் இது ஊடகங்களின் கருத்து எனவும் அதிகாரபூர்வமற்ற ஒன்றெனவும் பா.ஜ.காவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
எனினும் தமது கட்சிக்கும் ரஜினிகாந்திற்கும் இடையில் நல்லுறவு காணப்படுவதாகவும் அவரை கட்சி வரவேற்கும் எனவும் தமிழிசை சௌதர்ராஜன் கூறியுள்ளார்.
 
தமிகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திப்பதற்கென தமிழிசை சௌந்தர்ராஜன் டெல்லி பயணமாகியுள்ளார்.
 
அட்டல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலப் பகுதியில் கொண்டுவரப்பட்ட நதிகளை இணைக்கும் திட்டத்திற்கென ரஜனிகாந் ஒருகோடி இந்திய ரூபாவை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments