குடு ச்சாமர என்றழைக்கப்படும் போதைப் பொருள் வர்த்தகர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கான உதவிகளை வழங்கியதாக கூறப்படும் உதவி குடிவரவு குடியல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த போதைப் பொருள் வர்த்தகர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தபோது நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையிலிருந்து குறித்த நபர் தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சிறைச்சாலை காவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
0 Comments