Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

'காதல்' பட புகழ் நடிகர் தண்டபாணி மாரடைப்பால் மரணம்


காதல் படத்தில் நடிகை சந்தியாவின் தந்தையாக நடித்து பிரபலமான தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடந்த 2004ம் ஆண்டு பரத், சந்தியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல். அந்த படத்தில் சந்தியாவின் அப்பாவாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் தண்டபாணி. சந்தியா மீது பாசத்தைக் கொட்டும் தந்தையாக நடித்த தண்டபாணி, படத்தின் உச்சக்காட்சியில் நாயகன் பரத்தை கொடூரமாக அடித்து உதைக்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்து அத்தனை பேரையும் பதைபதைக்க வைத்தவர். அதன் பிறகு பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் நாட்டாமையாக நடித்திருப்பார். காதல் படம் மூலம் பிரபலமானதால் அவர் காதல் தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜின் நண்பராக நடித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரின் உயிர் பிரிந்தது. அவரது மரணம் குறித்து அறிந்த திரை உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தண்டபாணி சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் நடித்து வந்தார். நேற்று கூட அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments