Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அவுஸ்ரேலியாவில் இன்று நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டம்

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 இலங்கை அகதிகளின் உண்மை நிலையினை தெளிவு படுத்துமாறுகோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகதிகளுக்காக செயற்படும் அமைப்பான, Refugee Action Coalition Sydney இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
சிட்னி டவுன் ஹோலில் இடம் பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வெள்ளை இன மக்கள் கலந்து கொண்டனர்.
153 பேருடன் வந்த அகதிப் படகு உண்மையில் நியூசிலாந்துக்கு செல்வதாகத்தான் வந்ததாகவும் இந்த படகினை அவுஸ்ரேலியா கடற்பரப்புக்கு அப்பால் சென்று 25 கிலோ மீற்றர் தொலைவில் பிடித்துள்ளனர் எனவும் அகதிகளுக்காக செயற்படும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த அகதிப் படகைக் கைது செய்த கடற்படையினர் 200 லீற்றர் டீசல் வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உத்தரவின் பெயரிலே அனைத்து தஞ்சக் கோரிக்கையாளர்களும் சுங்கத் திணைக்களத்தின் கப்பலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே இந்த ஆர்ப்பட்டம் இடம் பெற்றது.
இந்த ஆர்ப்பட்டதுக்கும் தமிழர்கள் சார்பில் பெரும் ஒத்துழைப்பு வழங்கப்பட வில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.






Post a Comment

0 Comments