நாவலையில் வீட்டுப்பணியாளரான டெய்சி மனோகரி மற்றும் அவருடைய குழந்தையை 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த கணவன் மனைவியை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அந்த ஜோடிக்கு நேற்று மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகளான தேவிகா டி லிவேரா தென்னகோன் மற்றும் நிமல் நம்புவசனம் ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்ப்பு வாசிக்கப்பட்டதும், தன்னை சிறைக்கு அனுப்பாமல் உடனடியாகத் தூக்கில் போடுமாறு உக்ரேனியப் பெண்ணான, யன்னா பிறிஸ்யானா கோரிக்கை விடுத்தார்.
0 Comments