Advertisement

Responsive Advertisement

நாவலப்பிட்டியில் சிறுத்தை தாக்கி பெண் பலி , சிறுவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பார்க்கேபல் தோட்ட காட்டு பகுதியில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேய்ச்சலுக்காக விடபட்டிருந்த கால்நடைகலை மேற்பார்வையிட சென்ற போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 31 வயதான பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments