Home » » மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய கொடியேற்றம்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய கொடியேற்றம்


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இராமன் வழிபாடுகளை மேற்கொண்ட ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பிதிர்க்கடன்களை தீர்க்கும் மிக முக்கியத்துவமிக்க தீர்த்தமான ஆடிஅமாவாசை தீர்;த்த உற்சவத்தினை கொண்ட ஆலயமாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.

தீர்த்தம்,தலம்,விருட்சம் ஆகியவற்றினை ஒருங்கேகொண்டு அருளாட்சிபுரிந்துவரும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெற்றது.

பல்வேறு கலை நிகழ்வுகளுடன் ஊர்வலமாக கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

இன்று விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டப பூஜைகளுடன் தம்பத்துக்கு விசேட பூஜைகளுடன் நண்பகல் 12.00மணிக்கு கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை சுவாமி,உள்வீதி,வெளிவீதியுலா என்பன இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி காலை 7.00மணிக்கு மாமாங்கேஸ்வரரின் தேரோட்டம் நிகழவுள்ளதுடன் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

ஆலயத்தின் பிரதம குரு சிவாச்சாரிய கேசரி,சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் கிரியை நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த கொடியேற்ற நிகழ்வில் வடக்கு கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


























Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |