Home » » 11 வயது சிறுமியின் வயிற்றில் 15 கிலோ எடையுள்ள கட்டி. 6 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்…

11 வயது சிறுமியின் வயிற்றில் 15 கிலோ எடையுள்ள கட்டி. 6 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்…

சீனாவில் உள்ள 11 வயது சிறுமியின் வயிற்றின் மேல் இருந்த 15 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சீன மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்காக அந்த சிறுமி சுமார் 2500 மைல்கள் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவை சேர்ந்த 11 வயது சிறுமி Han Bingbing என்பவருக்கு வயிற்றின் மேல்பகுதியில் ஒரு கட்டி தோன்றியது. நாள் ஆக ஆக அது வளர்ந்துகொண்டே இருந்தது. மருத்துவர்கள் பலவிதமான சிகிச்சை அளித்தும் அந்த கட்டியை சரிசெய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த கட்டி சுமார் 15 கிலோ எடையுள்ளதாக ஆகிவிட்டது. எனவே சீனாவில் உள்ள பீஜிங் மருத்துவமனையில்தான் இதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என கூறிவிட்டனர். அந்த சிறுமியின் பெற்றோர் இருக்கும் இடத்திற்கும் பீஜிங் நகரத்திற்கும் இடையே 2500 மைல்கள் தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த சிறுமியை பெற்றோர் பீஜிங் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அறுவைசிகிச்சைக்காக சேர்த்தனர்.  இரண்டு கால்பந்து அளவு பெரிய சைஸில் இருந்த அந்த கட்டியை சீன மருத்துவர்கள் குழு சுமார் 6 மணிநெரம் அறுவை சிகிச்சை செய்து  கட்டியை முழுவதுமாக அகற்றி சாதனை செய்தனர். இந்த அறுவை சிகிச்சைக்காக £11,000 செலவு ஆனதாகவும், அந்த செலவு முழுவதையும் The Xukecheng Health Care Corporation என்ற நிறுவனம் ஏற்றுக்கொண்டது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிறுமி Han Bingbing நலமுடன் இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் மற்ற குழந்தையை போல இந்த சிறுமியும் நார்மலாகிவிடுவார் என்றும் அவருடைய பெற்றோர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |