சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு இந்தோனேஷியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மலேசியாவின் தென் -மேற்கு கரைக்கு அப்பாலான கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை மூழ்கியதால், இருவர் மரணமடைந்துள்ளனர்.
இதன்போது, குறைந்தபட்சம் 18 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. அதிகாலை சுமார் 60 பேர் வரையில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, கடந்த மாதம் இந்தோனேஷிய குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த 02 கப்பல்கள் மலேசியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் மூழ்கியதால் குறைந்தபட்சம் 10 பேர் மரணமடைந்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான இந்தோனேஷியர்கள் மலேசியாவிலுள்ள தோட்டங்களிலும் ஏனைய தொழில்களிலும் சட்டவிரோதமாக வேலை செய்து வருகின்றனர்.
0 Comments