Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் - தாயும், மகளும் கைது

வாழைச்சேனை மருதநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இவர்களை நேற்று (18) கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். 
 
வாழைச்சேனை மருதநகர் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்திருந்தவேளை சட்டவிரோதமான முறையில் கருக்கலைக்க முற்பட்டார்கள் என தமக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். 
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இவர்களை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments