Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் மாணவர்கள் இருவர் மூழ்கிப் பலி…

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் மாணவர்கள் இருவர் இன்று காலை மூழ்கி; பலியாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
முறக்கொட்டான்சேனை கஜமோகன் வித்தியாலயத் சேர்ந்த  மாணவர்கள் இருவரே பலியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுற்றுலாவின் நிமித்தம் ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஒருவருடன் 14 மாணவர்கள் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டுக்கு சென்றுள்ளனர். 

அங்கிருந்து அவர்கள் படகுமூலமாக முகத்துவார பகுதிக்குச் சென்ற போது அங்கு மட்டி பிடிக்கச் சென்ற இரு மாணவர்களே கடலில் மூழ்கியதாகி மரணமாகியுள்ளனர்.

அவ்விருவரையும் காப்பாற்றுவதற்காக  கடலில் இறங்கிய ஐவரும் கரையிலிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேவேளை, உயிரிழந்த மாணவர்களான பிரவின் மற்றும் செல்வராணி ஆகிய இருவரினதும் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments