Advertisement

Responsive Advertisement

ஏறாவூர் பொலிஸ்பிரிவில் விற்பனை நிலையமும் மர அரிவு நிலையமும் தீயினால் நாசம்

ஏறாவூர், பிரதான வீதி, வம்மியடியில் அமைந்துள்ள மர அரிவு நிலையமும் மரத்தளவாட விற்பனை நிலையமும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது பற்றி ஏறாவூர் பொலிஸ் நியைத்தில் முறையிடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ.எல். அப்துல் றஸ்ஸாக் என்பவரின் மரத்தளவாட  விற்பனைக் கடையும், ராஜசிங்கம் சதீஸ்குமார் என்பவரின் மர அரிவு நிலையமுமே தீயினால் எரிந்துள்ளது.
மர அரிவு நிலையம் அமைந்துள்ள கடையின் பின் பகுதியிலிருந்தே தீ பரவி முன்னாலுள்ள மரத்தளவாட விற்பனை நிலையத்துக்கும் தீப்பிடித்து கடையின் கூரைப் பகுதி எரியத் தொடங்கிய பின்னரே பொது மக்கள் கண்டுள்ளனர்.
வழமை போன்று வெள்ளிக்கிழமை கடை மூடப்பட்டிருந்ததால் இந்த மரத்தளவாட விற்பனை நிலையத்தில் எவரும் இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பும் தனது கடைக்கு தீ வைக்க முயற்;சி எடுக்கப்பட்டதாகவும், அது குறித்து ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மரத்தளவாட விற்பனை நிலைய உரிமையாளரான ஏ.எல். அப்துல் றஸ்ஸாக் தெரிவித்தார்.
பொது மக்களின் உதவியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அயலவர்கள் தெரிவித்தனர்.
  
மரத்தளவாட விற்பனை நிலையத்துக்கு ஆறு இலட்ச ரூபாய் நஷ்டமேற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் முறையிட்டுள்ள அதேவேளை சுமார் நான்கு இலட்ச ரூபாய் பெறுமதியான தனது மர அரிவு இயந்திரங்கள் தீயினால் எரிந்துள்ளதாக அதன் உரிமையாளர் ராஜசிங்கம் சதீஸ்குமார் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டள்ளனர்

Post a Comment

0 Comments