பகிடிவதை செய்ததால் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாணவர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பயின்ற சந்திரன் பிரசாத் சதீஸ்கரன் என்பவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாளில் இந்த பகிடிவதை சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன் போது பேராதனை பல்கலைக்கழத்தின் பொறியியல் பீடத்தில் முதலாம் ஆண்டில் பயின்று வந்த செல்வவிநாயகர் வரப்பிரகாஷ் என்ற மாணவன் உயிரிழந்தார்.
கண்டி மேல் நீதிமன்றம் இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாடு சென்று விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சர்வதேச பொலிஸார் மூலம் அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருமாறு மேல் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
அப்போது மாணவராக இருந்த மற்றுமொரு நபரும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதிலும் மரணத்துடன் அவருக்கு நேரடியான தொடர்பு இருக்கவில்லை என சாட்சியங்கள் மூலம் தெரியவந்தது.
எவ்வாறாயினும் அவருக்கு ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம் உயிரிழந்த மாணவரின் தந்தைக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாவை செலுத்துமாறும் உத்தரவிட்டது.
0 comments: