மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் புனித மைக்கேல் கல்லூரிக்கும் இடையில் நடாத்தப்படும் 98ஆவது பாடுமீன்களின் சமர் கடின பந்து கிரிக்கட் போட்டி கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.50 ஓவர் கொண்ட போட்டியில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மைக்கேல் கல்லூரி அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது . 98வது பாடுமீன்களின் சமர் கிரிக்கட் போட்டியில் 53 ஓட்டங்களினால் மெதடிஸ்த மத்திய கல்லூரி வெற்றி பெற்று , மூன்றாவது முறையாகவும் வெற்றிக்கின்னத்தை சுவிகரித்து , பாடுமீன்களின் கிரிக்கட் வெற்றிக் கிண்ணத்தை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தனதாக்கிகொண்டது. இன் நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் .எஸ் .கிரிதரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் .எம் .உதயகுமார் ,மத்திய கல்லூரி அதிபர் விமல்ராஜ் , மட்டக்களப்பு (கல்வி வலயம் ) பிரதி கல்விப் பணிப்பாளர் .எம் .குருகுல சிங்கம் , மைக்கேல் கல்லூரி அதிபர் திருமதி .மாசிலாமணி ,அருட்தந்தை ,ரஜீவன் , கல்லூரி பழைய மாணவ சங்க செயலாளர் கோபிநாத் , ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments