Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கமநல அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் விவசாயிகளின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைக்கும் வகையில் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கான நிரந்தர கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியில் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் இந்த நிரந்தர கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

கடந்த காலத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு நிரந்தர கட்டிடம் இல்லாமல் விவசாயிகளுக்கு சிறந்த சேவையினை வழங்கமுடியாது அதிகாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர்.

இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து கமநல சேவைகள் அமைச்சரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் நிரந்தர கட்டிடத்துக்கான நிதியொதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்துக்காக கமநல சேவைகள் அமைச்சு 90 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி மா.கோபாலரட்னம்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,ஊடக இணைப்பாளர் ஜீவானந்தன் மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நிலையத்துக்கான அடிக்கல் நடப்பட்டதுடன் விசேட கூட்டமும் நடத்தப்பட்டது.



















Post a Comment

0 Comments