Advertisement

Responsive Advertisement

ஒரு பெண் இது மாதிரி நடிக்கலாமா?

விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த ‘அரிமா நம்பி’ படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இதில் ஓட்டல் பாரில் ஆண்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற காட்சியில் பிரியா ஆனந்த் நடித்து இருந்தார்.
 
ஏற்கனவே ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட படங்களில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மது குடித்து விட்டு போதையில் தள்ளாடுவது போன்று இப்படத்தில்தான் நடித்து இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரியா ஆனந்துக்கு எதிராக  விமர்சனங்களும் கிளம்பின. இந்த காட்சியில் நடித்தது ஏன் என்பதற்கு பிரியா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
கதைக்கு அந்த காட்சி தேவைப்பட்டது. மது அருந்துவது போல் நடித்தால்தான் நாம் சொல்ல வந்த கருத்து ஏற்கும்படியானதாக இருக்கும் என்று டைரக்டர் தெரிவித்தார். எனவேதான் மது அருந்துவது போல் நடித்தேன். ஒரு பெண் இது மாதிரி நடிக்கலாமா? என்கின்றனர். பெண் இப்படி நடந்து கொள்வதால் தான் கலாசார சீரழிவு நடக்கிறது என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments