செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ தேவையான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை கண்டறியவும், காற்று மண்டலத்தை ஆய்வு செய்யவும் விண்கலம் அனுப்பப்பட்டு உள்ளது. ரூ.450 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட அந்த விண்கலம், கடந்த ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. அந்த விண்கலம் 5 முக்கியமான ஆய்வு கருவிகளை சுமந்து சென்றுள்ளது.
அந்த விண்கலம் செப்டம்பர் மாதம் 24–ந் தேதி செவ்வாய் கிரகத்தை அடையவுள்ளது. அதற்கான 300 நாட்கள் விண்வெளி பயணத்தில், இதுவரை 75 சதவீத தூரத்தை வெற்றிகரமாக கடந்து தொடர்ந்து பயணம் செய்து வருகிறது. அதாவது சுமார் 510 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. விண்கலமும், அதில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வு கருவிகளும் நல்ல நிலையில் உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கூறினர்.
கடந்த மாதம் (ஜூன்) 11–ந் தேதி ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டு விண்கலம் சரியான திசையில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) ஒரு திருத்தம் செய்யப்பட உள்ளது.
0 Comments