கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில், ரஜரட்ட ரஜனி ரயில் பெட்டிகள் இரண்டு தடம் புரண்டதில் எட்டுப் பேர் காயமடைந்தனர். மாத்தறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த ரயில் பெட்டிகள் இரண்டு தடம் புரண்டதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக கரையோர ரயில் சேவைகள் நேற்றிரவு பாதிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
|
![]() ![]() ![]() |
0 Comments