Advertisement

Responsive Advertisement

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு ஒரு தொகுதிப் புத்தகங்களும், அலுமாரியும் Dr.M.தேவராஜா அவர்களினால் அன்பளிப்பு

மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடிக்கு நியூசிலாந்தில் வசிக்கும் பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பழைய மாணவர்                 Dr.M.திரு. தேவராஜா அவர்களினால் ஒரு தொகுதிப் புத்தகங்களும், புத்தகங்களை வைப்பதற்கான அலுமாரியும்  அன்பளிப்புச் செய்யப்பட்டன. இந்நிகழ்வானது 23.06.2014 காலை ஒன்றுகூடலில் நடைபெற்றது. இப்புத்தகங்கள் எமது பாடசாலையின் அதிபர். திரு.பொன் வன்னியசிங்கம் அவர்களுக்கு டாக்டர் M. தேவராஜா அவர்களின் சகோதரரால் காலை ஒன்று கூடலின் போது வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் திரு ஜெகமோகன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, டாக்டர் M. தேவராஜாவின் வாழ்க்கை வரலாறுகள் பற்றியும் எடுத்துக் கூறுனார். பாடசாலையின் அதிபரால் மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி அதிபர், பிரதியதிபர்கள், உப அதிபர், மாணவர்கள், கல்வி சாரா உழியர்கள் சார்பாக நன்றியுரை வழங்கப்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் பாடசாலைக்கு பயனுள்ளதாக அமையும் என்பது அனைவருடைய கருத்தாகவும் இருந்தது. 

புத்தகங்களின் விபரங்கள்

1. ஆங்கிலம் பொது - 05 புத்தகங்கள்
2. பொதுச் சாதாரண வினாவிடை 2000 - 2013 , General English past paper  - 02
3. தமிழ் வழியாக ஆங்கிலம் - 02
4. BIOLOGY 28 புத்தகங்கள்
5. Objective Biology - NEET
6. உயிரியலக்கான அறிமுகம் - 02
7. நுண்ணங்கி உயிரியல் - 02
8. அங்கிகளின் பல்வகைமை - 02
9. வினாத்தாள்கள்
10. எண்ணக்கருக்கள் வரைவிலக்கணங்கள்
11. உயிரியின் தொடரர்ச்சி
12. பாரம்பரியமும் உயிரியின் தொடர்ச்சியும்
13. தொடழிற்பாடும் அங்கிகள்
14. அடிப்படை புள்ளிவிபரவியல்
15. கடந்தகால வினாக்கள் 2002 - 2013
16. உயிரியல் பகுதி 1
17. உயிரியல் பகுதி 2
18. உயிரியல் பகுதி 3
19. உயிரியல் பகுதி 4
20. உயிரியல் பகுதி 5
21. உயிரியல் பகுதி 6











Post a Comment

0 Comments