கண்டுபிடிப்புக்கள் பற்றிய SAHASAK NIMAVUM தேசிய கண்காட்சியானது திருகோணமலையில் இடம்பெற்றது. இப்போட்டியில் எமது பாடசாலையில் தரம் - 10 ஐச் சேர்ந்த பி.ஹரிநாத் என்பவரால் தானியங்கி கதவு, மேம்படுத்தப்பட்ட மின்விசிறி , தரம் - 12 சேர்ந்த S. துருபதன் அவர்களால் "இலத்திரனியல் கூட்டல் இயந்திரம்" , தரம் 12 ஐச் சேர்ந்த எல். கௌதமன் அவர்களால் இடையீட்டுக் கருவி, ரீசேர்ட் மடி கருவி, ஈரமண்ணில் இருந்து மின்பெறல் ஆகிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் "ஈரமண்ணில் இருந்து மின்பெறல்" காட்சிப்பொருள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளது. இதற்கு உதவிகள் புரிந்த அனைத்து ஆசிரியர்களும் பாடசாலை ஒன்றுகூடலில் பாராட்டப்பட்டார்கள்.
0 Comments