Advertisement

Responsive Advertisement

கச்சதீவை இந்தியா மீளப்பெறுவதைத் தடுக்கும் சர்வதேச சட்டங்கள் இல்லை! - கொழும்பு கருத்தரங்கில் தெரிவிப்பு

இந்தியா கச்சதீவை மீண்டும் கைப்பற்றினால் தென்சீனக் கடல் பிரச்சினையை ஒத்த பிரச்சினையாக அது மாறும் என்று கொழும்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாம்- இலங்கை சம்மேளனத்தின் அமர்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய பலரும் இந்தக் கருத்தை முன்வைத்தனர். கச்சதீவு விடயம் ஏற்கனவே முடிந்து விட்டது. எனினும் தற்போது அதனை திரும்பப்பெற தமிழ் நாடு கோரிக்கைகளை விடுத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அங்கு, இலங்கைக்கு நிர்க்கதியான நிலை ஏற்படும்.
அதிகாரம் மிக்க தமிழகத்தின் கோரிக்கைக்கு அமைய இந்தியா கச்சதீவை மீண்டும் கைப்பற்றினால் அது சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினையை ஒத்த பிரச்சினையாக மாறும். ஏனெனில் இதனை தடுக்கக்கூடிய சர்வதேச சட்டங்கள் இல்லை என்று உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். தென்வியட்நாமின் பகுதிகளை சீனா கைப்பற்றியமை ஏற்றுக் கொள்ளத்தக்க விடயம் அல்ல என்பதையும் இந்தக் கூட்டத்தில் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர்.

Post a Comment

0 Comments