Advertisement

Responsive Advertisement

பள்ளிவாசலுக்கு வெளியே தொழுவதை நிறுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள்

ஜும்ஆத்தொழுகையின் போது பள்ளிவாசலுக்கு வெளியே நின்று தொழுவதை இயன்றளவு தவிர்த்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் சகல முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறிப்பாக கொழும்பு, கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை உள்ளிட்ட சில  பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வெளியே வீதியோரங்களில் சில முஸ்லிம்கள் ஜூம்ஆத்  தொழுகையை நிறைவேற்றுகின்றனர். 
  
இதனால், பாதுகாப்பு தரப்பில் மட்டுமல்ல முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு என்றும் கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு வெளியே தொழும் சகல முஸ்லிம்களும் உள்ளே சென்று தமக்குரிய இடங்களை இயன்றளவு ஒதுக்கிக்கொண்டு தொழுது கொள்ளுமாறும் நிர்வாகிகள் பணிவாக கேட்டுக்கொள்கின்றனர். 

Post a Comment

0 Comments