மகிந்த சிந்தனையின் கீழ் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுவரும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடநெறிப்பிரிவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 26.06.2014 களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
களுதாவளை மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.அலோசியஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன்,ருத்திரமலர் ஞானபாஸ்கரன்,பட்டிருப்பு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் உலககேஸ்பரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கல்வி அமைச்சரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த விஞ்ஞான தொழில்நுட்ப பாடநெறிப்பிரிவு களுதாவளை மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மகிந்த சிந்தனையின் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 27மில்லின் ரூபா செலவில் இந்தவிஞ்ஞான தொழில்நுட்ப பாடநெறிப்பிரிவுக்கான கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப பாடநெறிக்காக ஆறு பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் பௌதீக வளங்களை பூர்த்திசெய்யும் வகையில் அமைக்கப்படவுள்ள கட்டிடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விஞ்ஞான தொழில்நுட்ப பாடநெறியை பூர்த்திசெய்யும் வகையில் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் இருந்து தமிழ் முஸ்லிம் மாணவர்கள் களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.
0 Comments