Home » » இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பயிற்சி

இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பயிற்சி

15 வயதிற்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் இலத்திரனியல் தேசிய ஆளடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக கிராம சேவையாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம் ஹனீபா தெரிவித்தார்.
இது விடயமாக கிராம சேவகர்களுக்கான  பயிற்சி நெறி நேற்று திங்கட்கிழமை 16.06.2014 ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டை மூலம் பின்வரும் அனுகூலங்களை அடைந்து கொள்ள முடியும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பினை இலகுவாக உறுதிப்படுத்திக் கொள்ளவும், சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளவும்;, நவீன தொழில் நுட்பத்துடன் இலகுவாகப் பணிபுரியவும், முழுக் குடும்பத்தினதும் தரவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அவசர தேவையின் போது மிகவும் பயனுள்ளதொன்றாகவும் இந்த புதிய இலத்தரனியல் அடையாள அட்டை உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம சேவகர்கள் வீடு வீடாக வரும்பொழுது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழின் போட்டோப் பிரதி,  குடும்ப உறுப்பினர்களின் பெயர், பிறந்த திகதி மற்றும் அடையாள அட்டை இலக்கம் போன்ற விவரங்களைப் பொதுமக்கள் கிராம சேவையாளருக்கு வழங்குவதற்குத் தயாராய் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
                 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |