Advertisement

Responsive Advertisement

வாள்வெட்டில் கலக்கும் வடக்கு இளைஞர்கள்! - இன்றும் கிளிநொச்சியில் ஐவர் படுகாயம்.

கிளிநொச்சி விநாயகர்புரம் பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஐவர் படுகாயமடைந்தனர். விநாயகர்புரம் பகுதியில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற திருவிழாவுக்கு வந்திருந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது. இதில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஐவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மூன்று பேர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments