பேருவளை, அளுத்கம பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வன்முறைகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணையமும் வேறு பல முக்கிய அரச நிறுவனங்களின் இணையங்களும் கூட முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜனாதிபதியின் இணையம் கடந்த ஞாயிறன்று ஊடுருவித் தாக்கிச் செயலிழக்க வைக்கப்பட்டது என்பதை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உறுதிப்படுத்தினார். ஆனால் திங்கட்கிழமை முதல் அது மீள செயற்படுத்தப்பட்டு இப்போது இயங்குகின்றது என்றார் அவர்.
|
ஜனாதிபதியின் இணையம் மற்றும் திறைசேரி, லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் போன்றவற்றின் இணையங்கள் கடந்த சில நாட்களாக ஊடுருவித் தாக்கும் நிலையை எதிர்கொண்டன என்பதை இலங்கை அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
|
0 Comments