Advertisement

Responsive Advertisement

கனடாவில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கையர்கள் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிப்பு!

கனடாவில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான செயற்பாடுகளை கனேடிய அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். கடந்த காலங்களில் கனடாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆட்கடத்தல்கள் அதிகமாக காணப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட பல இலங்கையர்களும், ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் குடியுரிமை வழங்கும் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கனேடிய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மனித கடத்தல் தொடர்பிலான இந்த அறிக்கையில், கண்காணிக்கப்படும் நாடுகளின் பட்டியிலில் இரண்டாம் வரிசையில் அமெரிக்கா இலங்கையை வைத்துள்ளது. ஆட்கடத்தல்களுக்கு எதிராக முறையான நடவடிக்கையை மேற்கொள்ளாத மற்றும் ஆட்கடத்தலுக்கு தூண்டுகின்ற நாடுகள் இந்த வரிசையில் இணைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments