Advertisement

Responsive Advertisement

முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு அவசர எச்சரிக்கை?

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறினால் இலங்கைக்கான வீசா நடைமுறைகளை கடுமையாக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென குறித்த முஸ்லிம் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமறைகளை பிரயோகி;ப்போர் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
பங்களாதேஷ், ஈராக், ஈரான், மலேஷியா, கட்டார், இந்தோனேஷியா, குவைட், மாலைதீவு, பாலஸ்தீனம், பாகிஸ்தான், நைஜீரியா, துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தள்ளன.
இராஜதந்திர காரியாலங்கள் ஊடாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வீசா முறைமை கடுமையாக்கப்பட்டால் தற்போது வெளிநாடுகளில் பணியாற்றி வரும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்களே பாதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவ்வாறான எச்சரிக்கைகள் எதுவும் தமக்கு விடுக்கப்பட்டதாக தெரியவில்லை என வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
லட்சக் கணக்கான இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பாணந்துறையில் அமைந்துள்ள நோ லிமிட் ஆடை வர்த்தக நிலையம் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments