கனடா மொன்றியலில் நேற்றையதினம் மாலை தமிழர் ஒரவர் குத்திகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி கொலை 7745 Mountain Sights எனும் இடத்தில் அவரது வீட்டிற்கு பக்கத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. ஜெயராசன் மாணிக்கராஜா (40) எனும் குடும்பஸதரான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் . அவரது நண்பர்களில் ஒருவராக உள்ள ஒரே ஊரை சேர்ந்த நபரே இக் கொலையை செய்ததாக காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளார்கள் . ஜெயராசன் மாணிக்கராஜா அவர்கள் மொன்றியலில் 2000 ஆம் ஆண்டு குடியேறியதிலிருந்து ஒரு சிறந்த சமூக சேவையாளராகவும் ஆலயத்தொண்டு மற்றும் விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
![]() |
0 Comments