பேருவளை - அம்பேபிட்டிய சந்தியில் உள்ள முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் தீப்பற்றியதா அல்லது தீ வைக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்துச் சம்பவத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் மற்றும் புத்தகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமே தீக்கிரையாகியுள்ளது.
|
கடையின் பின்பகுதி கதவு உடைக்கப்பட்டு பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் ஆராய்ந்த ஒருவர் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் உடனடியாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
|
0 Comments