மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு பிரதிஸ்டை செய்யப்படவுள்ள விக்ரகங்களை கொண்டுசெல்லும் நிகழ்வு இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு புகையிரத நிலைய சந்தியில் உள்ள முத்துலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள்,சிறுமிகளின் கண்கவர் நடனங்களுடன் பெருமளவு அடியார்களின் அரோகரா கோசத்துடன் இந்த விக்ரகங்கள் கொண்செல்லப்பட்டுள்ளன.
ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 06ஆம் 07ஆம் திகதிகளின் ஆலயத்தில் அடியார்கள் எண்ணெனைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கண்ணைக்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments