மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சை மரங்களில் காய்க்கத் தொடங்கியுள்ளன.
காத்தான்குடி 6ஆம் குறிச்சி மற்றும் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள பேரீச்சை மரங்களே இவ்வாறு காய்க்கத் தொடங்கியுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால்; காத்தான்குடி பிரதான வீதியை அழகுபடுத்துவதற்காக நடப்பட்ட மேற்படி பேரீச்சை மரங்கள் வருடம் தோறும் மே, ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் காய்த்து பழமாகின்றன.
காத்தான்குடி பிரதான வீதியில் 50 இற்கும் மேற்பட்ட பேரீச்சை மரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments